கமலஹாசனின் இளைய மகளும் தமிழ் சினிமாவில் இளம் நடிகையுமான அக்ஷரா ஹாசன் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறியப்பட்டார். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.
குறிப்பாக இவரது பூனை கண்ணழகு காந்தம் போல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் அவரின் அழகுக்கு அடிமையாகி விட்டார்கள். குறிப்பாக அவரது குழந்தைத்தனமான சுபாவமும் பேச்சும் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷரா ஹாசன், அக்கா ஸ்ருதி ஹாசன் குறித்து பேசும்போது, எனக்கும் அக்காவுக்கும் நிறைய சண்டை வரும் சின்ன வயசுல இருந்தே நிறைய விஷயத்துக்கு நாங்க சண்டை போட்டுப்போம். ஆனால் அக்கா மீது ஒரு பயம் கலந்த மரியாதை எனக்கு எப்பவுமே இருக்கு.
அவங்க என் டிரஸ் எப்பவுமே எடுத்து போட்டுப்பாங்க. எனக்கும் அவளுக்கும் ஒரே சைஸ் அப்படிங்கிறதால எப்பவுமே என்னோட டிரஸ் எடுத்து போட்டுப்பாங்க. அது மட்டும் இல்லாமல் அக்காவை எப்பவுமே மரியாதையாக கூப்பிடனும் பேர் சொல்லி கூப்பிட்டால் என்ன மண்டையிலே அடிப்பாங்க என்று அக்கா ஸ்ருதிஹாசன் உடனான அழகான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.