தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகரான யோகி பாபு பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி காட்டி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக தனக்கான இடத்தை பிடித்து விட்டார்.
இவர் காமெடி நடிகர் என்பதையும் தாண்டி காமெடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோ கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் யோகி பாபுவின் தனித்துவமான நடிப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததோடு அவருக்கான தனி அடையாளத்தை அந்த திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்தது.
தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதன்படி வெளிவந்த திரைப்படம் தான் தர்ம பிரபு, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் இதில் மண்டேலா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று யோகி பாபுவுக்கு மீண்டும் மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்நிலையில் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு படத்திற்கு சுமார் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கும் யோகி பாபுவின் முழு சொத்து மதிப்பு ரூ. 40 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் யோகி பாபு தற்போது போட் திரைப்படத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடுத்தக்கது.