விஜய் தங்கியுள்ள அபார்ட்மெண்டில் 3 நடிகைகள்… சாய் பல்லவியும் லிஸ்டில் இருக்காங்க!

விஜய் தங்கியுள்ள அபார்ட்மெண்டில் 3 நடிகைகள்… சாய் பல்லவியும் லிஸ்டில் இருக்காங்க!

தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அரசியலில் ஈடுபட்டு முழுநேர அரசியல்வாதியாகவும் இறங்கவுள்ளார்.

இந்த நிலையில் தளபதி விஜய் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் பிரம்மாண்டமான அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வீடு வாங்கியுள்ளார். இதன் விலை பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, விஜய் வாங்கியுள்ள அதே அபார்ட்மெண்டில் நடிகை ரம்பாவும் சமீபத்தில் வீடு வாங்கியதாக அவருடன் குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. ரம்பாவை தொடர்ந்து நடிகைகளான சாய் பல்லவி, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் இந்த அபார்ட்மெண்டில் வீடு வாங்கி இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ,நடிகர் ஆர்யா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் எல்லோருமே இந்த அபார்ட்மெண்டில் வீடு வாங்கி லக்ஸரி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.