பிரிட்டன் பங்கர் பேஸ்டர் ஏவுகணையை ரஷ்யா நோக்கி ஏவ அனுமதி கோரும் உக்ரைன்

பிரிட்டன் பங்கர் பேஸ்டர் ஏவுகணையை ரஷ்யா நோக்கி ஏவ அனுமதி கோரும் உக்ரைன்

பிரித்தானியா தனது அதி நவீன பங்கர் பேஸ்டர் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. ஆனால் அதனை ரஷ்யா மீது ஏவ வேண்டாம் என்று பிரிட்டன் கோட்டுக் கொண்டது. இருப்பினும் தற்போது உக்ரைன் அதிபர் அதனைப் பாவிக்க வேண்டிய கால கட்டம் வந்து விட்டதாகவும். தாம் அதனை பாவிக்க பிரித்தானியா ஒப்புதல் தரவேண்டும் என்று கடுமையான கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இதனை தற்போதைய பிரதமர் கியர் ஸ்டாமர் ஏற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அப்படி பிரித்தானிய அரசு ஒப்புக் கொண்டால், ரஷ்யாவில் உள்ள பல பங்கர்களை(பதுங்கு குழி) மற்றும் ஆயுதக் கிடங்குகளை உக்ரைன் இந்த ஏவுகணைகளைப் பாவித்து உடனடியாகத் தாக்கும் என்று கூறப்படுகிறது. உரைன் மிகச் சிறந்த உளவுப் படை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. இது இஸ்ரேலின் மொசாட் படைக்கு சமமானது. ரஷ்யாவில் நடக்கும் அனைத்து விடையங்களையும் உக்ரைன் உடனுக்கு உடன் அறிந்து கொள்கிறது. இதன் காரணத்தால் தான், ரஷ்ய அதிபர் புட்டினால், உக்ரைன் அதிபரை கொல்ல முடியவில்லை.

இந்த வகையில் ரஷ்யாவின் பல ரகசிய ஆயுதக் கிடங்குகளையும், பதுங்கு குழிகளையும் உக்ரைன் தற்போது அறிந்து கொண்டது போல இருக்கிறது. இதனால் தான் பங்கர் பேஸ்டர் ஏவுகணைகளை பாவிக்க உக்ரைன் அனுமதி கோருகிறது.