அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகராக இருந்து வருகிறார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அஜித்தின் ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். நடிப்பை தாண்டி அஜித் கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார்.இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவருக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மகன் ஆத்விக் ஷாலினிக்கு அன்பு முத்தம் கொடுத்த புகைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட அது தீயாய் பரவி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து அஜித்தின் மகனா இது என ரசிகர்கள் எல்லோரும் செம ஷாக்காகி விட்டனர். அழகில் அப்பாவையே மிஞ்சிவிட்டதாக எல்லோரும் கூறி வருகின்றனர்.