ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆச்சு….” வேலையில்லா பட்டதாரி” மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆச்சு….” வேலையில்லா பட்டதாரி” மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது தான் வேலையில்லா பட்டதாரி. இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் நடிகை அமலாபால் சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன் வண்ணன் உள்ளிட்டோர் முக்கி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் .

அம்மா சென்டிமென்ட், காதல் மற்றும் வேலை , மிடில் க்ளாஸ் வாழ்க்கை , படித்த பட்டதாரி வேலை இல்லாமல் இருப்பது குறித்த பல விஷயங்களை இந்த படம் வெளிப்படுத்தியிருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக சாதனை படைத்திருந்தது. குறிப்பாக தனுஷின் கெரியரில் மிக முக்கிய படமாக இந்த திரைப்படம் பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றுடன் தனுஷ் 25வது படம் வேலையில்லா பட்டதாரி வெளிவந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் இருந்து 10 years of VIP என பதிவு செய்துள்ளார். மேலும் இப்படத்தின் மொத்த வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் உலகளவில் ரூ. 60 – ரூ. 65 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறுகின்றனர். இது தனுஷின் சினிமா கெரியரில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.