ரூ. 10 கோடி வாட்ச்…. ரூ. 100 கோடி பங்களா- சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சூரி!

ரூ. 10 கோடி வாட்ச்…. ரூ. 100 கோடி பங்களா- சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சூரி!

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலே பேமஸ் ஆனவர் தான் நடிகர் சூரி. முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரி பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

அதன் பின் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவரது ரேஞ்சே வேற மாறி மாறிவிட்டது .

இந்நிலையில் நடிகர் சூரி குறித்து ப்ளூ சட்டை மாறன் ஒரு மீம்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ”ரூ.10 கோடி ரூபாய் ஸ்விஸ் வாட்ச். ரூ. 100 கோடியில் வாஷிங்டனில் புதிய பங்களா என்று குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆன சூரி” என்று கூறி விமர்சித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் “அவர் உழைப்பில் முன்னேற்றம் அடைகிறார்” என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.