Rolls-Royce சொகுசு கார் வாங்கிய ராம்சரண் – எத்தனை கோடி தெரியுமா?

Rolls-Royce சொகுசு கார் வாங்கிய ராம்சரண் – எத்தனை கோடி தெரியுமா?

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ராம்சரண் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு சூப்பர் ஹீரோவாக இருந்து வருகிறார். இவர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதை எடுத்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஆன சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ராம் சரண் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் விலை ரூ. 7.5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கலந்துகொள்ள ராம் சரண் தனது மனைவி மற்றும் மகளுடன் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு தனது புதிய காரில் வந்துள்ளார். அதன் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.