உக்ரைன் ரஷ்ய நகரங்கள் மீது கடும் ஷெல் தாக்குதல்களை தொடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ரஷ்ய நகரங்கள் மீது உக்ரைன் கண்மூடித்தனமான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. அதி சக்திவாய்ந்த அமெரிக்க ஆட்டிலறி ஷெல்களை உக்ரைன் பயன்படுத்தி வருவதால், ரஷ்ய நகரங்கள் பெரும் சேதமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை. இதனை ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது தான் மிகவும் வேடிக்கையான விடையமாக உள்ளது.
இது நாள் வரை உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்கி வந்த நிலையில். முதல் தடவையாக ரஷ்யா மீது உக்ரைன் தனது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளமை உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. நேற்று(30) இடம்பெற்ற கடும் தாக்குதலில் 14 ரஷ்ய பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ரஷ்யாவே ஒத்துக்கொண்டுள்ளது. அத்தோடு பல சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடரும் என்று உக்ரைன் அறிவித்துள்ள நிலையில். மேற்கு உலக நாடுகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஒரு வழியாக உக்ரைனுக்கு படு பயங்கரமான ஆயுதங்களைக் கொடுத்து, ரஷ்யாவையே தாக்கும் அளவுக்கு அந்த நாட்டை வளர்த்து விட்டுள்ளது மேற்கு உலகு. ஆனால் பொதுமக்கள் இறப்பது தொடர்பாக எந்த ஒரு நாடும் வாயே திறக்கவில்லை. Video