இன்று அதிகாலை 4 மணி அளவில், போலந்து வான் பரப்பில், ரஷ்யாவின் குரூஸ் ஏவுகணை ஒன்று பறந்துள்ளது. இது வீழ்ந்து வெடிக்க முன்னரே அதனை வானில் வைத்து போலந்து தகர்த்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யா போலந்தை தாக்க ஆரம்பித்து விட்டதா ? என்ற சந்தேகம் ஏற்பட்டதால், முழு நேட்டோ தளமும் அதி உச்ச அலேட்டில் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் உக்ரைன் மீது ஏவிய 28 ஏவுகணைகளில் ஒன்று, தான் போலந்து எல்லை வரை வந்துள்ளதாக தற்போது அறியப்படுகிறது. இதேவேளை 27 ஏவுகணைகளையும் உக்ரைன் வானில் வைத்தே சுட்டு வீழ்த்திவிட்டதாக அறிவித்துள்ளது. இதேவெளை போலந்து சுட்டு வீழ்த்திய ரஷ்யாவின் குரூஸ் ஏவுகணையை, அது வெளியிட்டுள்ளது. ராணுவப் பிரிவு அதனை ஆராய்ந்து வருகிறது.