கொங்கோவில் மீண்டும் படகு விபத்து 38 பேர் பலி

கொங்கோவில் மீண்டும் படகு விபத்து 38 பேர் பலி

 

கொங்கோவில் படகுவிபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

கிறிஸ்மஸ் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொடிருந்தவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியுள்ளது.

வடகிழக்கு கொங்கோவின் புசிரா ஆற்றுப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.38 பேர் உயிரிழந்துள்ளனர் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகளும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்துள்ளனர்.

20பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை கொங்கோவில் இடம்பெற்ற படகு விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு துறைமுகங்களில் 400க்கும் அதிகமானவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகே விபத்திற்குள்ளாகியுள்ளது என உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.