500 பில்லியன் டாலர் சொத்து! உலக வரலாற்றில் முதல் மனிதர் எலான் மஸ்க்

500 பில்லியன் டாலர் சொத்து! உலக வரலாற்றில் முதல் மனிதர் எலான் மஸ்க்

 

அமெரிக்கா: டெஸ்லா நிறுவனத்தின் முதலாளியான எலான் மஸ்க் இதுவரை வரலாற்றில் வேறு யாரும் சம்பாதிக்க முடியாத அளவு சொத்து மதிப்பைப் பெற்று உலகப் பணக்காரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப்பை கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுக்க எதிர்த்தன. அவரை ஆதரித்து களத்தில் இறங்கிய ஒரே கார்ப்பரேட் முதலாளி எலான் மஸ்க்தான். கிட்டத்தட்ட டிரம்ப் முன்வைத்த கொள்கைகளில் முழு உடன்பாடு கொண்டிருந்தார் எலான் மஸ்க். டிரம்ப் வெற்றி உறுதியானதும் எலான் மஸ்க் நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டன.

டிரம்ப் ஆட்சியில் எலான் மஸ்க் அமைச்சராகப் பதவியேற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை ஒருபடி தாண்டி அடுத்த அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் போட்டியிடக் கூடும் என்றும் சில ஊடகங்கள் கருத்துகளை வெளியிட்டிருந்தன. எலான் மஸ்க்குக்கு இப்போது 50 வயதுதான் ஆகிறது என்பதால் அவருக்கு அமெரிக்க அரசியலில் ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் எலான் மஸ்க். அவரது சொத்து மதிப்பு 500 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டி இருப்பதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வெளியிட்டுள்ள குறியீட்டின்படி தெரிய வந்துள்ளது. வரலாற்றில் இந்தளவுக்காகச் செல்வத்தைச் சம்பாதித்த முதல் மனிதர் எலான் மஸ்க்தான் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிக ஆடம்பரமான கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக மஸ்க் உள்ளார். மேலும் மின்சார வாகனங்கள், சூரிய ஒளியில் இயக்கும் பேட்டரிகள் வர்த்தகங்களில் அவரது நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம்ராக்கெட் உற்பத்திகளையும் அவர் செய்து வருகிறார். ஸ்பேஸ்எக்ஸை இவர்தான் வழிநடத்தி வருகிறார்.

மேலும் முன்பு ட்விட்டர் என்ற பெயரில் இயங்கி வந்த பிரபல சமூக ஊடகத்தை வாங்கி அதை X என பெயர் மாற்றம் செய்து நடத்தி வருகிறார். உலகில் செல்வாக்கு மிக்க ஊடகமாக இது இருந்து வருகிறது. மஸ்க் நியூராலிங்க், xAI, போரிங் கம்பெனி ஆகியவற்றை தலைமையேற்று நிர்வகித்து வருகிறார். கடந்த டிசம்பர் 11 அன்று, மஸ்க்கின் நிகர மதிப்பு 400 பில்லியன் டாலரை எட்டிவிட்டதாக சிஎன்என் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் மூலம் இந்த இலக்கை தாண்டிய முதல் நபர் இவர்தான் என்ற சாதனையை படைத்திருந்தார். 2024 ப்ராக்ஸி அறிக்கையின்படி, எலான் மஸ்க் டெஸ்லாவில் நிறுவனத்தின் 13% பங்குகளை வைத்திருப்பதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. அவர் தனது 2018 இழப்பீட்டுத் தொகுப்பிலிருந்து சுமார் 304 மில்லியன் டாலர் பயன்படுத்தக்கூடிய பங்குகளையும் வைத்திருந்தார். டிசம்பர் 2024 டெண்டர் சலுகையில் கிட்டத்தட்ட 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள SpaceX, அவரது அறக்கட்டளை மூலம் சுமார் 42% பங்குகளை மஸ்க் வைத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் 44 பில்லியன் டாலருக்கு எக்ஸ் குழுமத்தை வாங்கிய பிறகு, அதன் 79% பங்குகளை வைத்திருப்பார் என மதிப்பிடப்பட்டது. அக்டோபர் 2024 ஆம் ஆண்டு Fidelity Blue Chip Growth Fund ஆல் ஒதுக்கப்பட்ட கேரிவிங் மதிப்பின் அடிப்படையில், நிறுவனத்தின் மதிப்பு சுமார் 72% குறைந்திருந்தது. செவ்வாய்க் கிரகத்தில் குடியேறி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக முன்பே தெரிவித்த மஸ்க், ஏப்ரல் 2012 இல் வாரன் பஃபெட்டின் கிவிங் ப்லெட்ஜில் உறுப்பினரானார். ஜூலை 2020 இல் டெஸ்லா நிறுவனம் மூலம் உலகின் மிகவும் மதிப்புமிக்க கார் தயாரிப்பாளராக மாறினார். இதனால் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்தது. கடந்த ஜனவரி 2021 ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாஸ் உருவெடுத்தார். ஏப்ரல் 2022 இல், மஸ்க் நிறுவனத்தில் பங்குகளை வாங்கிய பிறகு ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இப்போது யாரும் தொட முடியாத அளவுக்கு அவரது சொத்து 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டி இருக்கிறது.