கொழும்பு கங்காராம விகாரைக்கு அருகில் பெரஹெர மாவத்தையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவகத்தில் உள்ள எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.