மெட்டா, கூகுள் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்காக கட்டணம் செலுத்தவேண்டும் – அவுஸ்திரேலிய அரசின் புதிய திட்டம்

மெட்டா, கூகுள் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்காக கட்டணம் செலுத்தவேண்டும் – அவுஸ்திரேலிய அரசின் புதிய திட்டம்

மெட்டா கூகுள் போன்ற பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளிற்காக அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களிற்கு கட்டணம்செலுத்துவதை உறுதி செய்யும் புதியவிதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

2021 இல் அவுஸ்திரேலியா நிறைவேற்றிய தீர்மானத்தின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு காணப்படுகின்றது.

புதிய விதிமுறைகளின்படி வருடாந்தம் 250 மில்லியன் டொலருக்கு மேல் உழைக்கும் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஊடக நிறுவனங்களுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொண்டிருக்கவேண்டியிருக்கும் அவ்வாறுஉடன்படிக்கைகளை செய்துகொள்ளாத நிறுவனங்கள் அதிக வரி ஆபத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

இந்த திட்டம் இன்னமும் முழுமையான வடிவம் பெறாத போதிலும் பேஸ்புக் டிக்டொக் கூகுள்போன்றவற்றை இலக்கு வைத்து இந்த திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கலாம்.

கடந்தவருடம் இவ்வாறானதொரு திட்டம் அறிவிக்கப்பட்டவேளை மெட்டா அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுடன் எந்த உடன்படிக்கையையும் செய்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தது