உக்ரைன் கண்டு பிடித்துள்ள “Ruta” ஏவுகணை : ரஷ்யாவை அழிக்கப் பிறந்தது என்கிறார் அதிபர் ஜிலன்ஸ்கி !

உக்ரைன் கண்டு பிடித்துள்ள “Ruta” ஏவுகணை :  ரஷ்யாவை அழிக்கப் பிறந்தது என்கிறார் அதிபர் ஜிலன்ஸ்கி !

உக்ரைன் “Ruta” என்ற ஏவுகணையை தயாரித்து, அதனை பரிசோதனை செய்தும் பார்த்துள்ளது. குறித்த ஏவுகணை மணிக்கு 800Kம் வேகத்தில் செல்லக் கூடியது என்றும். சுமார் 300KM வரை பறந்து சென்று துல்லியமாக தாக்க வல்லது என்று உக்ரைன் அறிவித்துள்ளது. மிகவும் குறைந்த விலையில், இதனை தாம் உற்பத்தி செய்வதாக அன் நாட்டு அதிபர் ஜிலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இந்த குறுந்தூர ஏவுகணைகளை, ரஷ்யா மீது தாக்க, தயாரித்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் 2025 டொனால் ரம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க்க உள்ள நிலையில். இனி அமெரிக்காவிடம் இருந்து உதவிகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அடுத்து உக்ரைன், தனக்குத் தேவையான ஆயுதங்களை தாமே தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு புறம் இருக்க, ரஷ்ய- உக்ரைன் போரால், உக்ரைன் ராணுவம் ஆயுதங்கள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிப்பதில் மிகவும் பிரபல்யமாகி உள்ளார்கள்.

இதனால் இவர்கள் தயாரிக்கும் ஆயுதங்களுக்கு, உலகளாவிய ரீதியில் நல்ல மார்கெட் இருக்கிறது. தற்போது மித மிஞ்சிய ஆயுதங்களை உக்ரை பிற நாடுகளுக்கு விற்கவும் ஆரம்பித்துள்ளது என்பது ஒரு அதிர்ச்சியான தகவலும் கூட.