திம்பு: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானில் அந்நாட்டு குடிமக்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, மின்சாரம் என அனைத்துமே இலவசமாக கொடுக்கப்படுகிறது. வீடு இல்லாத அனைவருக்கும் நிலத்தையும் அரசே வழங்கிவிடும். ஆனால் இந்த சலுகைகளை எல்லாம் கிடைக்க அந்நாட்டு மக்கள் ஒரு நிபந்தனையையும் பூர்த்தி செய்ய வேண்டும். அது என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ள நாடு பூடான். இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இந்த நாடு இந்தியாவுடன் சுமார் 699 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பூமியின் சொர்க்கம் என்று கூட இந்த நாடு அழைக்கப்படுகிறது. பாரம்பரிய கலாசாரத்தையும் சுற்றுச்சூழலையும் கட்டிக்காப்பதில் இந்த நாடு அதிகம் மெனக்கெடுகிறது.
அனைத்தும் இலவசம்: அளவில் மிகச்சிறிய நாடாக இருக்கும் பூடான் தங்கள் நாட்டு மக்களுக்கு ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தையும் இலவசமாக கொடுக்கிறது. அது மட்டும் இன்றி உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பல சலுகைகளை இந்த நாடு தங்கள் குடிமக்களுக்கு அளிக்கிறது. ஆனால், ஒரு பெரிய கண்டிஷனும் அந்த நாட்டு மக்களுக்கு உண்டு. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ள பூடான் உலகின் பிற நாடுகளை விட சற்று வித்தியாசமானதாக உள்ளது. மேற்கத்திய கலாசாரம் அந்த நாட்டில் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த 1999 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சிக்கு கூட அனுமதி கொடுக்கப்படாமல் இருந்துள்ளது. தொலைக்காட்சியை ஏற்றுக்கொண்ட கடைசி நாடாக பூடான் தான் உள்ளது.
வீடு இல்லாதவர்களே கிடையாது: பூடானில் பிச்சைக்காரர்களே கிடையாது. வீடற்றவர்களும் கிடையாது. யாருக்காவது சொந்தமாக வீடு இல்லாமல் இருந்தால் அந்த நாட்டு மன்னரே இடம் ஒன்றை வழங்கி வீட்டையும் கட்டி கொடுத்து விடுவார். கல்வி, எவ்வளவு பெரிய உயரிய சிகிச்சை என்றாலும் கூட ஒரு பைசா செலவு இல்லாமல் அனைத்தையும் செய்துவிடலாம். வெளிநாட்டிற்கு உயர் சிகிச்சை சென்றால் கூட அதற்கான கட்டணத்தை அந்த நாட்டு அரசாங்கமே செய்து கொடுத்து விடும்.
திகட்ட திகட்ட சலுகைகள்: பூடானின் ஊரக பகுதிகளில் மின்சாரமும் இலவசம் தான். விவசாயிகளுக்கும் உரம், விதைகள் ஆகியவற்றை அரசே இலவசமாக கொடுத்து விடுகிறது. பூடானை பொறுத்தவரை சுற்றிலும் நிலப்பரப்பைத்தான் எல்லையாக கொண்டுள்ளது. அதனால், அந்நாட்டிற்கு கடற்படை கிடையாது. விமானப்படையும் கிடையாது. ராணுவம் உள்ளது என்றாலும் இந்தியாவிடம் இருந்தே ஆயுதம் மற்றும் பயிற்சியை எடுத்துக்கொள்கிறது. ஒரே ஒரு கண்டிஷன்: நாட்டு மக்களுக்கு திகட்ட திகட்ட சலுகைகளை அள்ளி தெளிக்கும் பூடான் அந்த நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய கண்டிஷனையும் போட்டுள்ளது. அதாவது பூடான் மக்களுக்கு வெளிநாட்டினரை திருமணம் செய்ய சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. மன்னர் குடும்பம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே இதில் இருந்து விலக்கு உண்டு.
திருமணத்தை பொறுத்தவரை பல்வேறு சடங்குகளுக்கு பிறகுதான் நடைபெறும். இந்த சடங்குகளுடன் நடைபெறும் திருமணமே அங்கீகரிக்கப்படும். பூடானில் பெரும்பாலும் புத்த மதத்தினரை கடைபிடிப்பவர்கள்தான் உள்ளார்கள். பூடானில் மனைவியின் வீட்டிற்கு கணவர் சென்று விடுவார். போதுமான அளவு அவர் பணம் சம்பாதித்த பிறகே தனியாக வசிக்க செல்வார்கள்.