சிரியாவை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி அசாட் – ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார் !

சிரியாவை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி அசாட் – ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார் !

கடந்த 24 வருடங்களாக சிரியாவை ஆண்டு வந்த, அஸ்மா-அல்-அசாட், நேற்றைய தினம்(08) மாலை மொஸ்கோவுக்கு தனி வீமானம் மூலம் தப்பிச் சென்றுள்ளார். அவருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்படும் என புட்டின் இன்று(09) அறிவித்துள்ள நிலையில். இது எப்படி நடந்தது ? ஒரு நாட்டு ஜனாதிபதி ஏன் தனது நாட்டில் இருந்து தப்பிச் செல்லவேண்டும் ? சிரிய ராணுவம் என்ன செய்தது என்ற கேள்விகள் உங்களுக்கு எழும். இதன் பின்னால், ரஷ்யா , ஈரான், லெபனான் என்று ஏகப்பட்ட நாடுகள் உள்ளது. இந்த சுவாரசியமான விடையத்தை சற்று பார்கலாம் !

1965ம் ஆண்டு பிறந்த அசாட்டுக்கு வயது 59. கடந்த 2000ம் ஆண்டு முதல் கொண்டு சிரிய நாட்டின் ஜனாதிபதிடாக இருக்கிறார். எண்ணற்ற கொலைகளைச் செய்த, சர்வதேச நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு இனப் படுகொலையாளி. சிரியாவில் உள்ள, சிறுபாண்மை இனத்தவர்களை கொன்று குவித்தார். இதனை அடுத்து அனைத்து சர்வதேச நாடுகளும், சிரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் ரஷ்யா, ஈரான், வட கொரியா, லெபனான் மேலும் சில அரபு நாடுகள் சிரியாவுக்கு ஆதரவு கொடுத்து வந்தார்கள். சிரியா மிகப் பெரிய ஒரு நாடு. ஒரு பக்கம் ஈராக், மறு முனையில் துருக்கி, மேலும் ஜோர்டான் ஆகிய நாடுகள் எல்லையாக இருக்கிறது. இருந்தாலும் லெபனான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு சிரியாவின் ஒரு சிறிய இடத்தை கைப்பற்றி வைத்திருக்கிறது.

இது போக, தற்போது கிளர்ச்சிப் படை தலைவராக இருக்கும் அல்-ஜவ்லானி, சிரிய தலை நகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளார். இதனால் சில தினங்களுக்கு முன்னரே ஜனாதிபதி அசாட்டின் மனைவி நாட்டை விட்டு தப்பி ஓட. நேற்றைய தினம் அசாட் தப்பிச் சென்றுள்ளார். யார் இந்த அல்-ஜவ்லாணி ? வெறும் 42 வயதே ஆகும் அல்-ஜவ்லாணி , சிரியாவில் பிறந்து பின்னர் டுபாயில் அப்பாவுடன் தங்கி இருந்தார். பின்னர் மீண்டும் சிரியா வந்து விட்டார். ஆரம்ப காலத்தில், அல்-ஜவ்லாணி ஜிஹாட் என்று அழைக்கப்படும் மத வெறி பிடித்த குழு ஒன்றை ஆரம்பித்து, அல்-கைடாவுடன் கை கோர்த்தார். பின்னர் அதனை ஆயுதக் குழுவாக மாற்றி இருந்தார். 2012ல் அமெரிக்கா இவரை தீவிரவாதி என்று அறிவித்து தலைக்கு 10 மில்லியன் சன்மானத்தையும் அறிவித்தது.

இதேவேளை 2012ம் ஆண்டு முதல் விழித்துக் கொண்ட, அல்-ஜவ்லாணி தன்னை படிப்படியாக மாற்ற ஆரம்பித்தார். கடும் போக்கில் இருந்து சற்று விலகி, அல்-கைதா போன்ற கடும்போக்கு குழுக்களில் இருந்து வெளியே வந்து, சுயமாக இயக்க ஆரம்பித்தார். சிரியாவில் உள்ள, சில இடங்களை இவர் முதலில் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பின்னர் படிப்படியாக முன்னேறிக் கொண்டு இருந்தார். அமெரிக்கா திடீரென இவரை வேட்டையாடாமல் விட்டு விட்டது. அமெரிக்கா நினைத்திருந்தால் அல்-ஜவ்லாணியை கொலை செய்து இருக்க முடியும். ஆனால் அவர்கள் திடீரென பெல்டி அத்துவிட்டார்கள். அன்று எவருக்கும் இது ஏன் என்று புரியவில்லை ! ஆனால் இன்று நன்றாகத் தெரிந்து இருக்கும். எதற்காக என்று.

ரஷ்ய அதிபர் புட்டின், ஈரான் மத தலைவர் அய்துல்லா கொம்மேனி, வட கொரிய அதிபர் என்று, அமெரிக்காவுக்கு வேண்டாத அனைத்துத் தலைவர்களின் செல்லப் பிள்ளையாக அசாட் இருந்து வந்தார். எந்த பிரளையம் வந்தாலும், உடனே ரஷ்யா உதவி செய்யும். இதனால் அசாட் ஒரு அழிக்க முடியாத சக்த்தியாக மாறினார். ஆனால் மறு புறத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அல்-ஜவ்லாணி , சிரிய மக்கள் இடையே தனது செல்வாக்கை பெருக்கிக் கொண்டு இருந்தார், மிகவும் ரகசியமாக. நாளுக்கு நாள் மக்கள் சிரிய அதிபர் அசாட் மீது வெறுப்பை காட்டத் தொடங்கினார்கள். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் அல்-ஜவ்லாணி .

அல்-ஜவ்லாணியின் படைகள் மெல்ல மெல்ல முன்னேறி, சிரிய தலை நகர் டமாஸ்கஸ் நோக்கி வர ஆரம்பித்தவேளை தான் பெரும் ஆபத்து சூழ்ந்து கொண்டதை அசாட் உணர்ந்தார். வழமை போல அவர் ரஷ்யா மற்றும் ஈரானிடம் உதவி கோர. இம் முறை கேம் – சேஞ்சராக இது அமைந்து விட்டது. ஏற்கனவே உக்ரைன் போரில் கடும் தோல்வியடைந்து, பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டு, உள்ளது ரஷ்யா. இது போக இலங்கையில் இருந்து கூட 180 பேரை ராணுவத்திற்கு சேர்க்கும் கேவலமான நிலையில் ரஷ்யா உள்ளது. இதனால் உடனே ரஷ்யாவால் உதவ முடியவில்லை. ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், ஈரான் கடும் சிக்கலில் உள்ளது. அன் நாட்டுத் தலைவர்கள், ஒவ்வொரு இரவும் தமது இருப்பிடத்தை மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

இந்த நிலையில் ஈரானும் உதவவில்லை. இதனால் அல்-ஜவ்லாணியின் படைகள் கடு கதி வேகத்தில் முன்னேற ஆரம்பித்தது. இதனை அடுத்து அல்-ஜவ்லாணி படைகளை தடுத்து நிறுத்த ரஷ்யா தனது போர் கப்பல் ஒன்றை அனுப்பி வைக்க. அந்த போர் கப்பலை அமெரிக்க ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்க அல்-ஜவ்லாணி குழு தயாராக உள்ளதாக தகவல் ஒன்று கிடைக்க, ரஷ்ய கப்பல் உடனே பின் வாங்கி சிரியாவை விட்டு தூரச் சென்றுவிட்டது. இதனால் முன்னேறும் அல்-ஜவ்லாணி படையை தடுக்க, அசாட்டின் படைகளால் முடியவில்லை. மேலும் சொல்லப் போனால் சிரிய ராணுவத்தில் உள்ள பலர், அல்-ஜவ்லாணி படைகளோடு சென்று இணைந்து விட்டார்கள். இதனால் அசாட் உடனடியாக ரஷ்ய தலை நகர் மொஸ்கோவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் மொஸ்கோவில் இருப்பதாவும். ரஷ்யா அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்றும் புட்டின் அறிவித்துள்ளார்.

சிரிய தலைவர் அசாட்டா இல்லை கிளர்ச்சித் தலைவர் அல்-ஜவ்லாணியா ? என்று அமெரிக்கா கணக்குப் போட்டு பார்த்தால். அசாட் எப்படி என்றாலும் அமெரிக்கா சொல்வதை கேட்கப் போவதே இல்லை. ஆனால் கிளர்ச்சிப் படைத் தலைவர் அல்-ஜவ்லாணி அப்படி அல்ல. அவரை இலகுவாக மேற்கு உலக நாடுகள் தமது பிடிக்குள் கொண்டு வந்து விடும். கிளர்ச்சிப் படை டமாஸ்கஸை பிடித்த சில மணி நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது. சிரியாவை முன்னேற்ற நாம் உதவுவோம் என்பது தான் அதுவாகும். எனவே அல்-ஜவ்லாணி தற்போது மிக முக்கிய நபராக மாறியுள்ளார். சர்வதேச நாடுகளோடு அவர், அனுசரித்துச் சென்றால், சிரியா மீது போடப்பட்டுள்ள பல தடைகள் நீங்கும் வாய்ப்புகள் உள்ளது. இது சிரியாவுக்கு ஒரு புது தொடக்கமாக அமையவும் வாய்ப்புகள் உள்ளது.
அதிர்வுக்காக
கண்ணன்