பிரித்தானியா மட்டும் அல்ல, உலகளாவிய ரீதியில் படு மோசமான உணவுகளை மக்களுக்கு கொடுத்து பில்லியன் கணக்கில் லாபம் பார்க்கும் 5 நிறுவனங்களை மக்கள் அடையாளப்படுத்தி உள்ளார்கள். இதில் மிகக் கேவலமான இடத்தில் 5 முக்கிய உணவங்கள் உள்ளது.
1. பிராங்கோ
2. பீட்ஸ்சா ஹட்
3. KFC
4. பீட்ஸ்சா எக்ஸ்பிரஸ்
5. மக் டொனால்ஸ்
இந்த 5 உணவங்களும், மாதக் கணக்கில் தமது உணவுகளை குளிரூட்டியில் வைத்திருப்பது மட்டும் அல்லாது. மைக்ரோ வேவ் வை பாவித்து உணவுகளை சூடாக்கி, பின்னர் பொரித்தும் அவித்தும் கொடுக்கிறார்கள். தங்களது முக்கியமான இறைச்சி வகைகளை இவர்கள், மீண்டும் மீண்டும் சமைப்பதால் அதில் கொலஸ்ரோ அளவு பன் மடங்காகப் பெருகுகிறது. . இதனால் மேலே உள்ள 5 உணவங்களில் நீங்கள் உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர் என்றால், உங்களை சரி செய்து கொள்ளவும்.
மேலும் வாடிக்கையாளர் சென்ற பின்னர், உடனே சமையல் பண்ணி, புதிதாக உணவைச் சமைத்துக் கொடுக்கும் உணவங்களாக, வாச்சா, வெதர்-ஸ் பூன், ஹாவெஸ்டர் பப், நந்தூஸ், போன்ற உணவங்கள் உள்ளது. இவர்கள் வாடிக்கையாளர் ஆடர் செய்த பின்னரே சமையல் செய்ய ஆரம்பிப்பதோடு. தமக்கு தேவையான உணவுகளை, புதிதாக நாளுக்கு நாள் கொள்வனவு செய்கிறார்கள்.