ATACMS ஏவுகணையை ரஷ்யா மீது ஏவ USA ஒப்புதல்- ரஷ்யாவில் உள்ள 200 நிலைகளை குறிவைக்கும் உக்ரைன்

ATACMS ஏவுகணையை ரஷ்யா மீது ஏவ USA ஒப்புதல்- ரஷ்யாவில் உள்ள 200 நிலைகளை குறிவைக்கும் உக்ரைன்

ரஷ்யா மீது அதி நவீன மற்றும் நெடுந்தூரம் சென்று தாக்க வல்ல ஏவுகணையை ஏவ அமெரிக்கா பச்சைக் கொடியைக் காட்டியுள்ளதால். ரஷ்யாவில் உள்ள 200 ராணுவ நிலைகளை, உக்ரைன் தற்போது குறிவைத்துள்ளது. டொனால் ரம் ஆட்ச்சிப் பொறுப்பை ஏற்றால், உடனடியாக புட்டினுடன் பேசி இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவார் என்று எதிர்பார்கப்படுகிறது. இதேவேளை டொனால் ரம் உக்ரைனுக்கு கொடுக்கும் ஆயுதங்களையும் உடனே நிறுத்துவார். அதற்கு முன்னதாக எப்படி என்றாலும் ரஷ்யா மீது கடுமையான ஒரு தாக்குதலை நடத்தி முடிக்கவேண்டும் என்று தற்போதைய அமெரிக்க ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இதனால் ஜோ பைடன் அரசு, உக்ரைனுக்கு பல ஆயுதங்களை அள்ளி வழங்கியுள்ளதோடு, அதனை ரஷ்யாவுக்கு எதிராக பாவிக்க அனுமதியும் வழங்கியுள்ளது. ரஷ்யாவில் உள்ள ஆயுதக் கிடங்கு , மற்றும் நிலைகள் என சுமார் 200 இடங்களை உக்ரைன் தாக்க உள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்கா வழங்கிய, ATACMS ஏவுகணை ரேஞ்சுக்கு உள்ளே தான் வருகிறது.

இது போக பிரிட்டன் வழங்கியுள்ள ஸ்டோம் ஷடோ ஏவுகணையின் ரேஞ்சில் இருக்கும் , இடங்களை தாக்கவும் உக்ரைன் திட்டமிட்டுள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் உக்ரைன் கடுமையான தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இதற்கு ரஷ்யா எப்படி பதிலடி கொடுக்கும் என்பது தான் தெரியவில்லை. ரஷ்யா அணு ஆயுதத்தை பாவித்தால், உடனே ரஷ்யாவை தாக்குமாறு நேட்டோ நாடுகள் கட்டளை இட்டுள்ளது. இதனால் ரஷ்யா எந்த முடிவை எட்டும் என்பது தெரியவில்லை.