வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர் 15 ஆயிரம் பேரை நீக்க, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
ராணுவத்தில் பணியாற்றும் 15 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் மருத்துவ ரீதியிலாக அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள். அதாவது, அவர்களால், துறை ரீதியிலான சேவைகளை அளிக்க இயலாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2025- ஜனவரி-20 ம் தேதி அன்று அமெரிக்க அதிபராக, டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்கிறார். அப்போது இதற்கான உத்தரவு அறிவிப்பு வெளியாகும்.
டிரம்ப், அதிபராக முதல் முறை பதவி ஏற்றபோது, இதேபோல ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர்வதை தடுத்தார். ஆனாலும் அவர்கள் ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றி வருகிறார்கள். இந்த முறை அவர்கள் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அமெரிக்க ராணுவத்தில் 15,000 மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான டிரம்பின் தடையை அதிபர் ஜோ பிடன் நீக்கிவிட்டார்.
இப்போது, டிரம்பின் பாதுகாப்புத் தேர்வாளர் பீட் ஹெக்செத் அமெரிக்க ராணுவத்தின் பொறுப்பாளராக இருப்பவர்.அவர் மூன்றாம் பாலினத்தவர்களை பற்றிய நிராகரிப்புக் கருத்துக்களை கொண்டவர்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் பொறுப்பேற்பதால், அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிக்கல் வரும் என்று பல்வேறு தரப்பினரும் கூறத் தொடங்கியுள்ளனர்.