வெடிக்கும் 3ம் உலகப்போர்? இஸ்ரேலின் அடுத்த டார்க்கெட் துருக்கியா? பாதுகாப்பு துறை அமைச்சர் வார்னிங்

வெடிக்கும் 3ம் உலகப்போர்? இஸ்ரேலின் அடுத்த டார்க்கெட் துருக்கியா? பாதுகாப்பு துறை அமைச்சர் வார்னிங்

அங்காரா: பாலஸ்தீனத்தின் காசா மீதான போர் நடவடிக்கைக்கு மத்தியில் லெபனான் மற்றும் ஈரானுடன் இஸ்ரேல் மோதி வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேலில் அடுத்த டார்க்கெட் நாங்களாக இருக்கலாம். எங்கள் மீது இஸ்ரேல் மோதலை கடைப்பிடிக்கலாம். இந்த தாக்குதல் நடந்தால் அது 3ம் உலகப்போருக்கு அழைத்து செல்லும் என்று துருக்கி பாதுகாப்புத்துறை அமைச்சர் யாசர் குலேர் வார்னிங் செய்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தும் அண்டை நாடான லெபானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள் ஈரான் ஆதரவு பெற்றவை.
இதனால் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் மோதல் போக்கு உள்ளது.

இருநாடுகளும் ஒன்றையொன்று தாக்கி உள்ளனர். இப்படியாக ஒரே நேரத்தில் இஸ்ரேல் 3 நாடுகளுடன் மல்லுக்கட்டி வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக துருக்கி அதிபர் ரெசேப் தயிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.

தொடக்கம் முதலே காசா மீதான போர் நடவடிக்கையை துருக்கி கண்டித்து வந்த நிலையில் இப்போது இஸ்ரேலின் அனைத்து உறவுகளையும் அந்த நாடு துண்டித்துள்ளது. இதற்கிடையே தான் சூழலில் தான் இஸ்ரேலின் அடுத்த டார்க்கெட்டாக நாங்கள் இருக்கலாம் என்று அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை பரபரப்பாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக துருக்கி நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யாரச் குலர் டிவி100என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‛‛தற்போது புவிசார் அரசியல் விவகாரத்தில் பதற்றமான சூழல் உள்ளது. அபாயங்கள் ஏற்படும் அச்சம் உள்ளது. இதனால் அனைத்து வகையான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள துருக்கி தயாராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்” என்று கூறினார்.