சிரியாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் டமாஸ்கசில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளாமான கட்டடங்கள், குடியிருப்புகள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிரியாவில் இருந்து இயங்கி வரும் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான இஸ்லாமிக் ஜிஹாத் நிலைகளை குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களை கைவிட்டால் தான் போரை நிறுத்த முடியும் என லெபனானில் உள்ள கிறிஸ்தவ கட்சியின் தலைவர் சமிர் கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இதனால் லெபனான் மக்கள் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓராண்டுக்கும் மேலாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டு வர ஹிஸ்புல்லா தனது ஆயுதங்களை கைவிட வேண்டும் என சமிர் சுட்டிக்காட்டியுள்ளார்.