அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட உள்ள டொனால்ட் டிரம்பை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இதையடுத்து விரைவில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஏற்கனவே டொனால்ட் டிரம்பை கொலை செய்ய 2 முறை துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி இருந்தது.
இந்த நிலையில் தற்போது டொனால்ட் டிரம்ப் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல் வந்துள்ளது. அதாவது ஹமாஸ் அமைப்பினரால் டிரம்ப் உயிருக்கு ஆபத்து என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து டொனால்ட் டிரம்ப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஓராண்டாக நடைபெறும் போரை முடிவுக்கு வந்தபாடில்லை.
டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆனால் தங்களுக்கு ஆபத்து என நினைத்த ஹமாஸ் அமைப்பு, அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப்பை கொல்ல சதி திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது. இதற்கு பின்னணியில் ஈரான் இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.