அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால் ரம்பை விட கமலா ஹரிஸ் முன் நிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை காலமும் ரம்புக்கு ஆதரவாக இருந்த சில மாநிலங்கள் தற்போது கமலா ஹரிசுக்கு ஆதரவாக மாறி உள்ள விடையம், அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இறுதி நேரத்தில் டொனால் ரம், பல மாநிலங்களுக்கு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனை விட டெஸ்லா கம்பெனியின் நிறுவினர், எலான் மஸ்க் டொனால் ரம்புக்கு தனது ஆதரவை கொடுத்தார். அவருக்கு தனி விமானம் ஒன்றையும் வழங்கி இருந்தார். இந்த விமானம் ஊடாக பல மாநிலங்களுக்கு ரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
ஆனால் இறுதி முடிவு சற்று மாறியுள்ளது. குறிப்பாக எதிர்பார்த்தது போல பெண்கள் மற்றும் நடுத் தர வர்கத்தினர் கமலா ஹரிஸ் பக்கமாக சாய்ந்துள்ளார்கள். இன்று(05) நடைபெறவுள்ள தேர்தலில், பெரும்பாலும் கமலா ஹரிஸ் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுவும் அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதுவும் ஒரு இந்திய வம்சாவழி பெண், ஜனாதிபதி ஆகினால், அது ஊண்மையில் ஒரு வரலாறு தான் !