நேற்றைய தினம் தமிழகத்தில் விழும்புரத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் கூட்டத்தை நடத்தினார். தமிழகமே அதிர்ந்து போய் உள்ளது. எவரும் எதிர்பார்காத வகையில், பல லட்சம் மக்கள் வந்து கலந்து கொண்டார்கள். இதனால் தமிழ் நாட்டில் உள்ள பல கட்சிகள் அதிர்ந்து போய் உள்ளது. இதில் பேசிய நடிகர் விஜய், சில விடையங்களை முன் வைத்தார்.
அதில் தமிழ் நாட்டை சுரண்டி கொள்ளையடித்து வரும், குடும்ப அரசியலை ஒழிப்போம் என்று விஜய் பேசிய விடையம், தமிழகத்தை அதிரவைத்துள்ளது. இதனை தி.மு.க சற்றும் எதிர்பார்த்து இருக்காது. இதனை விட எந்தக் கட்சியும் எம்மோடு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று விஜய் நேரடியாகக் கூறியுள்ளதோடு. அவர்களுக்கு தகுந்த பதவி கொடுக்கப்படும் என்று, பக்கா ஆரசியல்வாதியாக மாறிப் பேசியுள்ளார்.
தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, உலகளாவிய ரீதியில் யூரியூபில் தற்போது ட்ரென் ஆகி உள்ளது விஜய் அவர்களின் பேச்சு தான். கீழே வீடியோ இணைப்பு.