கடந்த பல வருடங்களாகவே நடிகர் விஜய் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்து வந்தனர். அதோடு, அடிக்கடி தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அரசியல் தொடர்பான விஷயங்களை ஆலோசித்து வந்தார் விஜய். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ புஸ்ஸி ஆனந்த் விஜயின் வலதுகரமாக மாறினார். விஜய்க்கு அரசியல் தொடர்பான விஷயங்களை சொல்வது இவர்தான்.
சமீபத்தில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியையும் அறிவித்தார். அதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் நடக்கவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘பெயரை போல சில விசயங்களை திரும்பத் திரும்ப சொல்லியே ஆக வேண்டும். மாநாட்டுப் பயணப் பதுகாப்பில் தா.வெக தொண்டர்களும், ரசிகர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எல்லா வகையிலும் உங்கள் பாதுகாப்பே எனக்கு முக்கியம்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உங்கள் பாதுகாப்பு கருதியே இதை சொல்கிறேன். வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எந்த இடையூறும் செய்யக் கூடாது. போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்தவதோடு மாநாட்டு பாதுகாவல் படைக்கும், காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியே நான் மாநாட்டுக்கு வருவேன். நீங்கள் அதை மனதில் வைத்து வாருங்கள். நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்’ என கூறியிருக்கிறார்.
vijay,political,manadu,cinima news.