சீரியல் நடிகை ஜெனி பிரியா ஏற்கனவே விவாகரத்தான விமான ஓட்டுநர் துநேசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், அவர் நடிகையிடம் 50 பவுன் நகையை ஆட்டையை போட்டு விட்டு திருமணத்தையும் நிறுத்தியுள்ளார்.
சீரியல் நடிகை ஜெனி பிரியா ‘வாணி ராணி’ சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு கலக்கிய இவர், கலைஞர் தொலைக்காட்சியிலும் விஜே-வாக கவனம் பெற்றவர். ஜெனி பிரியா மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வந்தார்.
அதே போல் ‘ராஜமன்னர் வகையறா’ என்ற என்கிற சீரியலில் லீடு ரோலில் நடித்த ஜெனி பிரியா, இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில்… சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் 2-விலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் செய்து வைக்க இவருடைய பெற்றோர் முடிவு செய்த நிலையில், வெளிநாட்டில் உள்ள மாப்பிள்ளையை மெட்ரி மோனி மூலம் தேடி வந்தனர். அப்போது தான் ஏற்கனவே திருமணம் ஆகி, விவாகரத்து பெற்ற துநேசன் என்பவரின் குடும்பம் ஜெனி பிரியாவின் குடும்பத்தினருக்கு அறிமுகமாகியுள்ளனர். ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் துநேசன் மீது ஜெபி பிரியாவுக்கு பரிவு ஏற்பட்டதால், அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, நடிகை ஜெனி பிரியாவுக்கும் துநேசனை மிகவும் பிடித்துப் போனது. இதனால் ஜெனி பிரியா பெற்றோர்… சென்னையில் மிகவும் எளிமையான முறையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தத்தை முடித்த நிலையில், நவம்பர் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
துநேசன் குடும்பத்தினர் நடிகை ஜெனி பிரியா பெற்றோரிடம், வரதட்சணையாக 200 பவுன் கேட்ட நிலையில் அவர்கள் 100 சவரன் மட்டுமே தருவதாக கூறியுள்ளனர். அதற்கு துநேசன் குடும்பத்தினரும் சம்மதித்தனர். 100 சவரன் நகையை திருமணத்திற்கு பின் விமானத்தில் எடுத்து சென்றால், கஷ்டம் பிரச்சினை வரும் என கூறி இப்போதே நகையை கொடுக்குமாறு கூறி உள்ளனர். ஜெனி பிரியாவின் குடும்பத்தினரும் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை தானே என்று நம்பி 50 சவரன் நகையை கொடுத்துள்ளனர்.
இதன் பின்னர் ஜெனி பிரியாவை சிங்கப்பூருக்கு வரவைத்து துநேசன், அவருடன் விதவிதமான ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தி உள்ளார். மேலும் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, அழைத்துச் சென்றபோது துநேசன்னின் குடும்பத்தினர் தான் இவருடைய முதல் மனைவியை வீட்டை விட்டு துரத்திய சம்பவம் இவருக்கு தெரிய வந்தது. மேலும் இவருடைய மூத்த மகன் நடவடிக்கையும் வித்தியாசமாக இருந்ததை நோட் செய்து தன்னுடைய வருங்கால கணவரிடம் இது பற்றி ஜெனி பிரியா கேட்க அவன் மொபைல் கேமுக்கு அடிமையாகி இப்படி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.