உலக வங்கியின் , கட்டுப்பாடுகளை அனுரா அனுசரிக்கவில்லை என்றால். உலக வங்கி தனது உதவிகளை நிறுத்திக் கொள்ளும். இதனூடாக இலங்கை மேலும் பல பின்னடைவைச் சந்திக்க நேரிடும். உலக வங்கி 3 திட்டங்களை இலங்கை அரசிடம் கொடுத்து இருந்தது.
இலங்கையில் உள்ள மிகப் பெரிய அரச நிறுவனங்களை, தனியாரிடம் கொடுத்து. அதனூடாக வரும் பணத்தை வைப்பில் இட்டால், உலக வங்கி கடன்களை கொடுத்து உதவும் என்று கூறியது. இதனை அடுத்து, ரணில் அரசு, ஸ்ரீலங்கா ரெலிகொம், லங்கா வைத்தியசாலைகள் மற்றும் ஏர்-லங்கா விமானசேவை ஆகியவற்றை தனியார்மயப்படுத்த ஆரம்பித்திருந்தார்.
ஆனால் தற்போது ஜனாதிபதியாகப் பொறுப்பேறுள்ள , அனுரா ஏல்-லங்கா விமான சேவையை தனியார்மயப்படுத்த விரும்பவில்லை. இதனால் அவர் அதற்கான தடை உத்தரவைப் போட்டுள்ளதோடு. ஏர்-லங்கா விமான சேவையை திருத்தி அமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்காக அனுரா, சரத் கனேகொடவை, ஏர்-லங்காவின் உயர் அதிகாரியாக நியமித்துள்ளார். ஏர்-லங்கா விமான சேவை நாட்டின் பெருமை என்று கூறியுள்ள அனுரா, இந்த விமான சேவை இலங்கையர்கள் கைகளில் தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஏர்-லங்கா விமான சேவை, தற்போது 1.3B பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.