கடந்த 2005ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை, நீதிமன்றில் புதைந்து கிடக்கும் தராக்கி சிவராமின் வழக்கை மீண்டும் தோண்டி எடுக்க பொலிசார் கோரியுள்ளார்கள். இந்த உத்தரவு பொலிசாருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தெரியவில்லை. மூத்த தமிழ் ஊடகவியலாளரான தராக்கி சிவராமின் கொலை 2005ம் ஆண்டு நிகழ்ந்தது. அவரைக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியில் இருந்த கை ரேகை.
கைவிடப்பட்ட நிலையி இருந்த ஒரு ஜீப் வண்டியிலும் காணப்பட்டது. அந்த ஜீப் யாருடையது என்று பொலிசார் விசாரனை செய்த வேளை. அது புளொட் சித்தார்தனுடையது என்பது தெரியவந்தது. ஆனால் அவரோ அந்த வண்டி காணமல் போய் விட்டது என்று கூறிவந்தார், இந்த நிலையில் தான் மீண்டும் வழக்கு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு பெரும் குடைச்சல் ஒன்று காத்திருக்கிறது. அல்லது சிலவேளை அவர் கைதாகும் வாய்ப்பும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.