ரஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கச்சிய? வைரலாகும் ரக்ஷா பந்தன் போட்டோஸ்!

ரஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கச்சிய? வைரலாகும் ரக்ஷா பந்தன் போட்டோஸ்!

கியூட்னஸுக்கு பெயர்போன நடிகையான ராஷ்மிகா மந்தனா நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கன்னட சினிமாவில் க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர்தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார். தமிழில் சுல்தான் திரைப்படதில் நடித்து நடிகையானார். கடைசியாக இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா ரக்ஷாபந்தனை முன்னிட்டு தனது தங்கையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்ஸ் எல்லோரும் ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கச்சியா கியூட்டா இருக்காங்களே என இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வைரல் ஆக்கியுள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா , rashmika mandanna , cinema news , kollywood news