நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா படம் தயாராகியுள்ளது. விரைவில் வெளியாகப்போகும் ரகு தாத்தா படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்படித்தானே அண்மையில் படத்தின் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் ஃப்ளோரல் புடவை அணிந்து வந்தார்.
மிகவும் நேர்த்தியான கைவினைத்திறனுக்காக அறியப்பட்ட புகழ்பெற்ற பிராண்டான, Torani நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புடவையை கீர்த்தி அணிந்திருந்தார். கருப்பு நிறத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்துவந்த புடவையின் விலை ரூ. 61 ஆயிரம் என கூறப்படுகிறது. தென் இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் இடத்தைப் பிடித்தார் .கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி பிரபலமான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே தனது உடல் எடையை குறைத்து சிக்கன தோற்றத்திற்கு மாறி பாலிவுட் திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ் .
கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் சேலை விலை , keerthy suresh , keerthy suresh saree