விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வந்தவர் தான் டிடி. இவர் பிரபல நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார், குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலங்களின் நெருக்கமான தோழியானார்.
இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தி இருந்தார்கள். நடிகர்களுடன் நெருக்கமாக பழகியதாக டிடியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
அதன் பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் படு பிசியாக இருந்து வரும் டிடி சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து வந்தார். டிடி ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் விவரம் பற்றியும் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் பற்றியும் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. இந்நிலையில் டிடி-யின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன் படி டிடி ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோட் மட்டும் தொகுத்து வழங்கரூ . 4 லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம். இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி டிடி தனியாக பிசினஸும் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறாராம்.