தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளர் ஆன ஜீவி பிரகாஷ் கடந்த 2006 ஆம் ஆண்டு வெயில் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பொல்லாதவன், கிரீடம், சேவல், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, தாண்டவம், உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
இதனிடையே தனது பள்ளி தோழியான சைந்தவியை காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அன்வி என்ற ஒரு மகள் ஒரு பெண் குழந்தை பிறந்தார் குடும்பம், குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் சைந்தவி ஜீவி பிரகாஷ் ஜோடி திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தனர்.
இதற்க்கான காரணம் என்ன? என்று விசாரித்த போது ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தபோது குடும்பம் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. அவர் எப்போது நடிகராக ஆகினாரோ அன்றிலிருந்து குடும்பத்தில் பிரச்சனை தலைவிரித்தாடியதாம். ஆம் நடிகைகளுடன் படுக்கையறை காட்சிகள், முத்த காட்சிகளில் நடித்து வந்ததால் சைந்தவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு அது விவாகரத்தில் சென்று முடிந்திருக்கிறதாம்.
குறிப்பாக ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 100% காதல் ஷாலினி பாண்டே உடன் செய்த ரொமான்ஸ், ஜெயில் திரைப்படத்தில் அபர்ணாவுடன் செய்த ரொமான்ஸ், பேச்சிலர் படத்தில் திவ்ய பாரதியுடன் படுக்கையறை காட்சிகள் உள்ளிட்டவற்றால் சைந்தவி மிக கடுமையாக அவருடன் சண்டை இட்டாராம். இந்த மூன்று நடிகைகளின் நெருக்கமான காட்சிகளால் தான் இவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.