வருடத்தின் கடைசி வாரமான இந்த வாரத்தில் டிஆர்பி-யில் டாப் இடத்தைப் பிடித்த சீரியல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது. 10-வது இடத்தில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலும், 9-வது இடத்தில் பாக்கியலட்சுமி, 8-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் இனியா சீரியல் இருக்கிறது.
எப்போதுமே டாப் 5 லிஸ்டில் இருக்கும் இனியா இந்த முறை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வார டிஆர்பி-யில் 6-வது இடம் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் முத்து- மீனா தம்பதியர்களின் எதார்த்தமான நடிப்பு சின்னத்திரை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திழுத்துள்ளது. சிறகடிக்க ஆசை என்ற சீரியலால்தான் இனியா சீரியல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 5-வது இடத்தில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை காண்பிக்கும் வானத்தைப்போல சீரியல் உள்ளது.
அதேபோல் 4-வது இடம் எதிர்நீச்சலுக்கு கிடைத்துள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் எதிர்நீச்சல் தான் டிஆர்பிஎல் முதலிடம் மாஸ் காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியலின் கதையை சுவாரசியமாக கொண்டு செல்லாமல், ஜவ்வு மாதிரி இழுத்தடிக்கின்றனர். தொடர்ச்சியாக 3-வது இடம் கலெக்டராக மாஸ் காட்டுகிற சுந்தரிக்கு கிடைத்துள்ளது.
2-வது இடம் குடும்பப் பாரங்களை மொத்தமாக சுமக்கும் கயலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் கயலுக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகள் நாலா பக்கத்திலும் இருந்தும் வருகிறது. ஒரு பிரச்சனை முடிவதற்குள்ளேயே அடுத்த பிரச்சனை வந்து விடுவதால், அதை கயல் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த சீரியலின் ஹைலைட்.
முதலிடம் புத்தம் புது சீரியலான சிங்கப்பெண்ணே சீரியலுக்கு கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சீரியல், கயல் மற்றும் எதிர்நீச்சல் சீரியலைப் பின்னுக்குத் தள்ளி கடந்த சில வாரங்களாகவே முதல் இடத்தை தக்க வைக்கிறது. இதில் சில்வண்டு போல் இருக்கும் ஆனந்தி, அவ்வபோது சீரியலில் சிங்கம் போல் கர்ஜிக்கிறார். இந்த வருட அரை இறுதியில் சிங்கப்பெண் சீரியல் தான் மற்ற சீரியல்களுக்கெல்லாம் கடும் போட்டியாக மாறியது. அடுத்த வருடமாவது சிங்கப்பெண்ணை தோற்கடித்து மற்ற சீரியல் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.