தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநிலத் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022ம் வருடம் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்த முக்கியமான துறையான சிறப்பு திட்ட செயலாக்க துறை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினிடம் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை ஒன்றரை வருடம் இருந்தது.
இந்த துறை ஒரு வகையான சிறப்பு துறையாகும். பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு துறை ரீதியான அறிவிப்பை அந்த துறை அமைச்சர்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் இந்த சிறப்புத்திட்ட செயலாக்க துறை எந்த துறையில் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும். இந்த துறையின் கீழ்தான் முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். உதாரணமாக மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் இந்த சிறப்புத்திட்ட செயலாக்க துறை மூலம் கொண்டு வரப்பட்டது.
இந்த துறையைத்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் பெற உள்ளார். அனைத்து துறைகளையும் கண்காணிக்க வேண்டும் என்பதால் இந்த துறை இத்தனை காலம் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்தது. மற்ற துறைகளை கண்காணிக்க வசதியாக இந்த துறை முதல்வரிடம் இருந்தது. இதுதான் கடந்த 2022ம் ஆண்டு அமைச்சரவை மாற்றத்தின் போது விளையாட்டுத் துறையுடன் இந்த துறையும் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்றது.
இதன் மூலம் மகளிர் உரிமை தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், மாணவ, மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் என்று பல திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே வெளியிட்டார். அடுத்த பவர்: அதோடு இரண்டு மாதங்களுக்கு முன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்றார். கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் திமுகவில் இளம் ரத்தத்தை பாய்ச்சல் அந்த கட்சி முடிவு செய்துள்ளதாம். தி.மு.காவில் இருக்கும் ஒரே ஒரு இளைஞர் உதயநிதி மட்டும் தான் என்கிறார்கள்.