இலங்கையின் ரூபாய் கடந்த காலங்களில் பெரும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. 1 பிரித்தானிய பவுண்டுகளுக்கு 406ரூபா என்ற நிலையில் இருந்தது. ஆனால் நவம்பர் 14ம் திகதிக்குப் பின்னர் அது படிப்படியாக வளர்ச்சி கண்டு வருவதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் 380ரூபாவாக இருந்த நிலையில். இன்று அது மேலும் வளர்ச்சி கண்டு 368ரூபா வாக மாறியுள்ளது.
இருப்பினும் இது ஒரு தற்காலிக வளர்ச்சி என்று சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுத்துள்ள பண உதவியால், இவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும். இலங்கை கடன் கொடுக்க வேண்டிய நாடுகளுக்கு வட்டி செலுத்தும் நேரம் இது மீண்டும், பழைய நிலைக்குச் செல்லும் என்று அந்த வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள். மேலும் சிலர் குறிப்பிடுகையில்.
வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது என்றும். அதற்காக இலங்கை அரசு இவ்வாறு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இலங்கையை சீர் செய்ய இன்னும் 10 வருடங்கள் தேவை என்கிறார்கள் வல்லுனர்கள்.