இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய் இவரின் ஒவ்வொரு படங்களுக்கு முன் எதிர் பார்ப்பு நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இவர் சமீபத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்திருந்தார் இதன் மூலம் தமிழகத்தின் அரசியலில் பரபரப்பு தொடங்கியுள்ளது.
இவருக்கு இளைஞரின் ஆதரவு பெருமளவில் உள்ளது.இது தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் இவ்வளவு உச்சத்தில் இருந்து விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இவர் திடீரென அரசியலில் களமிறங்கி இருப்பது பலருக்கும் அச்சத்தைம் ஏற்படுத்தியுள்ளது. பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளார். இதனால் இவர் மீது பல வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இவர் வதந்திகளுக்கு எப்பொழுதும் பதிலளிப்பது இல்லை ஏனென்றால் மேடைப்பேச்சில் இவர் கூறியது வதந்திகளுக்கு பதிலளித்தால் அது உண்மையாகிவிடும் என்று.இவ்வருடம் மாணவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர்களுக்கு கூறியது எந்த விடயத்தையும் தீர ஆராய்ந்து முடிவெடுங்கள் என்பதே ஆகும்.
இவருக்கு வந்துள்ள வதந்திகளில் முக்கியமானது ஒன்றுதான் இவர் மனைவியுடன் விவாகரத்து செய்து விட்டார் என்பது.விஜய் தனது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்து விட்டார் என்பதுதான்.இதற்கு முக்கிய காரணம், விஜய் சமீபமாக தனது மனைவியை எந்த விழாக்களுக்கும் அழைத்துச் செல்வதில்லை, அவர் மனைவியும் கலந்து கொள்வதில்லை.இதை வைத்து ஒரு சிலரின் இச்செய்தியை உறுதிப்படுத்தி கூறுகின்றனர்.
விஜய் தனது மனைவியைப் பிரியவில்லை என்பது அவரின் நெருங்கியவர்களுக்கு நன்றாக தெரியும்.விஐயின் மனைவி சங்கீதா தற்சமயம் லண்டனில் தங்கி வருகிறார் இதற்கு முக்கிய காரணம் அவரது பிள்ளைகளின் படிப்பிற்காக என்று சொல்லப்படுகிறது.
இவரின் பிள்ளைகளை வெளிநாட்டில் மேற்படிப்பிற்காக இந்த நாட்கள் தங்கி இருக்கின்றனர்.ஏற்கனவே விஜயின் மகன் சஞ்சய் தனது படிப்பை முடித்துவிட்டு படம் இயக்குவதற்கு தயாராகி உள்ளார்,மகளும் தனது மேற்படிப்பை தொடர்கிறார். இதனால் சங்கீதா வெளிநாட்டிலேயே தங்கி உள்ளார். அவரின் மனைவி தனது பிள்ளைகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த வதந்திகளெல்லாம் விஜயின் அரசியல் பயணத்தை சீர்குலைப்பதற்கே ஆகும்.மேலும் இவ் வதந்திகளை கேட்ட விஜய் சிரித்து விடுவாராம்,பிரபலங்கள் என்றாலே இவ்வாறான வதந்திகள் வருவது சாதாரணம்தானே என்று கூறியுள்ளார். விரைவில் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் ஒரு முக்கிய நிகழ்ச்சி கலந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளாராம், இது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என கூறியுள்ளார்.
Actor Vijay, இளையதளபதி விஜய், cinema news, Hollywood news.