“DOCTOR படிப்பை முடித்த மஞ்சுவாரியர் மகள்”…. வைரல் போட்டோவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

“DOCTOR படிப்பை முடித்த மஞ்சுவாரியர் மகள்”…. வைரல் போட்டோவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

மலையாளத் திரைப்பட உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாகவும் திறமையான நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

 

வயது 45 ஆகியும் கூட இன்னும் அவரது மார்க்கெட்டும் மவுசும் குறையவே இல்லை. பார்ப்பதற்கு இளமை தோற்றத்தில் அழகாக அப்படியே இருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றார். இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக பெரும் அடையாளத்தை கொடுத்தது.

அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சுவாரியர் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது நடிப்பிற்காகவே ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், மஞ்சு வாரியர் மகளான மீனாட்சி சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பினை முடித்தவுள்ளார். அதன் பட்டமளிப்பு விழாவில் தந்தை திலீப் உடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாக அவருக்கு வஹ்ஸ்த்துக்கள் குவிந்து வருகிறது. திலீப் மற்றும் மஞ்சுவாரியர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்ட நிலையில் மகள் மீனாட்சி தந்தை திலீப் உடன் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.